அரசியல்வாதிக்கு காட்டுவது கருப்புக் கொடி.மழைக்கு நாம் காட்டுவது கருப்புக் குடை.மழை வேண்டுமென்று தவளைக்கு கல்யாணம் செய்வது ஒரு பக்கம்,யாகம் செய்வது மறுபக்கம்.மழை வந்தாலோ வருண பகவானிடம் ஒரு மணி நேரம் மழையை நிறுத்தச் சொல்லி பெட்டிஷன் போடுவதும்,சண்டை போடுவதும் நாம்தான்.விவசாயிகள் வேண்டுவது மழைதான்.ரமணன் நம் குடும்பத்தில் ஒருவரானதும் மழையால்தான்.நம் சாலைகள் பல்லைக் காட்டுவதும் மழையால்தான்.கொசுக்கள் மழைக்கு நன்றி சொல்கின்றன.மருத்துவர்களும் நன்றி சொல்கின்றனர்.மாணவர்களும்தான்.இப்படி வரங்களையும் சாபங்களையும் ஒரு சேரப் பெறும் மழை தற்போது பெய்து கொண்டிருக்கிறது தன்னியல்போடு.. ரசிப்போம் மழையை..
No comments:
Post a Comment